Friday 16 November 2012

நத்தைச் சூரி

உடம்புல இருக்கிற சூடுதாந பொல்லாத வியாதி மன உளைச்சல் படபடப்பு,காமம்,வயிற்றுப்புசம் அடிக்கடி சிறு நீர் கழித்தல் என்று ஏகப்பட்ட வியாதிகளை தரும் இந்த சூடு ,தொடர்ந்து நத்தை சூரி பலன்களை படிங்க ,இது குரு பிரமபரையின் வாயிலாக வருகிற மூலிகைகளில் ஒன்று ,இது காய கல்ப மூளிகைன்னு சிவா வாக்கிய சித்தர் சொல்லியிருக்காரு.




நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து விதைக்குத் தகுந்தவாறு கிணற்று நீரை ஊற்றி பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.
நத்தைச் சூரியின் விதையை வறுத்துப் பொடியாக்கி நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால், கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை குடித்து வர உடல் சூடு தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை குணமாகும்.
நத்தைச் சூரியின் விதையைப் பொடியாக்கி அதேயளவு கற்கண்டை பொடி செய்து கலந்து 5 கிராம் அளவு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வெப்பக் கழிச்சல், சீதக் கழிச்சல் குணமாகும்.
நத்தைச் சூரி வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல்பலம் அடையும். விந்து அதிகரிக்கும்.
விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.

உடல் தேற

நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு உடல் தேற நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.  இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.  

நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லலைப்பு ஏற்படாமல் தடுக்கும்.  மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும்.  வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.

நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.




No comments:

Post a Comment