Tuesday 20 November 2012

நாகப்பழ சட்னி

 நாகப்பழ சட்னி 

தேவையானப்பொருட்கள்:
  நாகப்பழம் பிசைந்து கொட்டை நீக்கியது - 1கப் 

  தேங்காய்த்துருவல் - 1/4 கப்
   கருவேப்பிலை   - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணியளவு (கெட்டிப் பெருங்காயம் இல்லையென்றால் பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன் 

செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், பருப்பு ஆகியவற்றை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், கருவேப்பிலை  நாகப்பழம் சேர்த்து ஒரு நிமிடம் வத்க்கவும். பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.


சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.


நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

குழந்தைப் பேறு தரும்
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
மூன்று நாவல் இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, குழந்தைப் பேறு ஏற்படும்.
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

No comments:

Post a Comment