Thursday 25 October 2012

எடைக்கு எடை பரிசு joke


அன்பான காலை வணக்கம் நண்பர்களே!
 
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்

********************************************************************************

ஒரு குட்டி பிராத்தனை

********************

[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

அசைபோட 5 விஷயங்கள்

***********************

1.சிரிக்கலாம் வாங்க

*********************

பேருந்தில் நடத்துனர் காலேஜ் பசங்களிடம்:- செக்கர் வந்துருக்கார்...பசங்களா எல்லாரும் அவங்கவங்க டிக்கட்ட காமிங்க..

காலேஜ் பசங்க:- என் டிக்கட் போன ஸ்டாப்ல இறங்கி போய்டுச்சி சார்...

*****************"

அரசே..புலவர்கள் பாடல் எழுதிக்கிட்டு வர்ற ஓசைச்சுவடியோட

எடைக்கு எடை பரிசு

தராதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா..?

என்னாச்சு அமைச்சரே?

ஒரு புலவர் பெரிய பாறையில பாடலை செதுக்கிக்கொண்டு

வந்திருக்கார்..!

***********

ஒல்லியான ஒருவன் தன் குண்டான மனைவியைப் பார்த்து, "5 பிள்ளைக்கு அம்மாவே" என்று கலாய்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் மனைவி ஒருவார்த்தை சொன்னதிலிருந்து அப்படிப் பேசுவதை நிறுத்திக்கொண்டான். அவள் சொன்னது "வாங்க 3 பிள்ளைக்கு அப்பாவே" என்று.

******************"

பேசாம நான் உங்க ரெண்டாவது பொண்ணையே கட்டிக்கிறேன் மாமா! - பேசாம இருப்பதற்கு எந்த பொண்ணை கட்டினாதான் என்ன மாப்ள?

*****************************************************************************

2.அழகே நலமா?

**************

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.பள பளக்கும்.

********************************************************************************

3.அன்பேநலமா?

முளைக் கீரையுடன் சிறிது அரிந்த வெங்காயம் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும்.

****************************************************************************

4.ஆன்மீகம்

1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.

*****

**.விஜய தசமி அன்று மந்திரங்கள் ஜெபிக்க தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் ஐம் க்லீம் சௌஹ சக்திதராய

ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய

ஹரிம் ஹ்ரிம் ஸ்ரீம் சுப்ரமண்யாய சரவணோத்பவாய ஹிரண்யோத்பவாய

க்லீம் சர்வ வச்யாய தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜும் ஷம் சம் அதிர்ஷ்ட தேவதாய

சண்முகாய சர்வதோஷ நிவாரணாய

சர்வக்ரஹதோஷ நிவாரணாய

சிவாயா சிவ தனயாய இஷ்டார்த்தப் பிரதாயகாய

கம் கணபதயே க்லௌம் ஷம் சரவணபவாய வசி வசி!

குரு தேவர் சுக பிரம்ம மஹரிஷியை மனதில் நினைத்துகொண்டு கணப்தியை எண்ணி ஜெபிக்கவும்.மந்திரத்தின் பலன் கலை அதை படுஇக்கும்போதே தெரிய வரும்.16 பெறுகளும் கிட்டும் பௌர்னமி அன்று விரதம் இருக்கவும்

**********************************************************************************2.

5.சமையல் குறிப்புகள்

**********************

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

*மூலிகை சமையல்

**********************

வாழைப்பூ சாதம் - வாழைப்பூவை நன்கு வேக வைத்து அதோடு வழக்கமாக துவையலுக்கு செர்ர்க்க வேண்டியவற்றை சேர்த்து அரைத்து பயன்படுத்த வெண்டும்.தாளிப்பதற்கு விளக்கெண்ணையயும் நல்லெண்ணையயும் ச்eெர்த்து பயன் படுத்துங்கள். பாடாய் படுத்தும் உடல் சூடும் அதனால் தோன்றுகிற அத்தனை வியாதிகளும் மாயமாய் மறையும்

******************************************************************************

*வீட்டுகுறிப்புகள்

****************

கை விரல்களில் ஏதேனும் இரும்புத் துகளோ, கண்ணாடித்துகளோ புகுந்து கொண்டு விட்டதா? அந்த இடத்தில் முதலில் கொஞ்சம் ஃபெவிகாலைத் தடவுங்கள். அது காய்ந்ததும் உரித்தெடுங்கள். அத்துடன் சேர்ந்து விரலினுள் மாட்டிக் கொண்ட துகளும் வந்து விடும்.

***************************************************************************

**5*நண்பேண்டா

நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!

***********************************************************************

**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!

***************************************************************************

*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?

***********************************************************************************

**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************

நல்லாட்சி மலரவைப்போம்

***************************

நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment