Thursday 4 October 2012


அன்பான காலை வணக்கம் நண்பர்களே


ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
**********************
"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!" "அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்.. மாணவன்: டேய் மச்சான், 'figure' டா!
"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!"

 *****************
அழகே நலமா?
செம்பருத்தி தழை,செம்பருத்தி பூ.,வெந்தயம்,தேங்காய்,கருவேப்பிலை, பாதாம் பருப்பு தேவையான அளவு எடுத்து நீரில் ஊற வைத்து அரைத்து தலையில் நன்கு ஊறவைத்து பிறகு சிகைக்காய் தூள் போட்டு அலசி வாருங்கள் வாரத்தில் 1 அல்ல 2 நாட்கள் செய்தாலே போதும்,முடி அழகா அமக்களமா இருக்கும்.நான் கரூரில் 10வது படிக்கும்போது நானே உரலில் ஆட்டி செய்வேன்,ரொம்ப அருமையா இருக்கும்,ஆட்டி விட பக்கத்துலருக்கற எந்த பொண்ணுங்கள வரமாட்டாங்க ஆட்டி முடிஞ்சதும் எனக்கு உனக்குன்னு போட்டி பொட்டுக்குவாங்க எனக்கு நெல்லிக்காய் அளவுக்குதான் கெடைக்கும்.நேத்து face bookla ஒரு தோழி கரூரில் இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்களுக்கு சொன்னேன் இந்த குறிப்பை,கரூர் ஞாபகம் வந்துச்சு அப்படியே உஙளுக்கும்

********************************************************************************
3.அன்பே நலமா?
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*************************************************************************
 5.நல்மொழிகள்:
**விளம்பரப்படுத்த வேண்டாம்
பக்தியை
விளம்பரப்படுத்தினால்
அது
உண்மையாகவே பிறரையும்
பக்திசெய்ய தூண்டும்
நல்ல நோக்கமுடயதாக
இருக்கட்டும்
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment