Friday 5 October 2012

உதட்டு வெடிப்பு அகல


அன்பான காலை வணக்கம் நண்பர்களே

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
**********************
"நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்."
"சார்.... உங்க கட்சிக்கு மேடைப் பேச்சாளர் தேவைன்னு கேள்விப்பட்டேன். நான் நல்லா பேசுவேன் சார்!" "அப்படின்னா நிமிஷத்துக்கு எத்தனை கெட்ட வார்த்தைகள் யூஸ் பண்ணுவே....?"

மனைவி: மாமியார் தொல்லை தாங்க முடியலை ஏதாவது செய்யுங்க...ன்னு சொன்னா இப்படி இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கீங்களே...? கணவன்: மாமியாரோட சண்டை போடும் போது உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னுதான்!
 *****************
அழகே நலமா?
ஆலிவ் ஆயிலுடன் கேரட் சாறு விட்டு லேசா சூடு பண்ணி பாத வெடிப்பு, உதட்டு வெடிப்பு,கன்னதுல பருவால் ஏற்பட்ட குழிகளில் அவை எல்லாம் அகலும் அல்லது முகத்தில் தடவினால் முகம் இளமையாக இருக்கு.கழுவும்போது ஏதாவது மாவு பொடி உபயோகிக்கவும்
 ********************************************************************************
3.அன்பே நலமா?
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.


 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*************************************************************************
 5.நல்மொழிகள்:
**விளம்பரப்படுத்த வேண்டாம்
பக்தியை
விளம்பரப்படுத்தினால்
அது
உண்மையாகவே பிறரையும்
பக்திசெய்ய தூண்டும்
நல்ல நோக்கமுடயதாக
இருக்கட்டும்
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496


No comments:

Post a Comment