Tuesday 2 October 2012


அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
**********************
**"ஒரு ஜவுளிக் கடையில்.. "டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க.." "சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!"
************
**"" "உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்" "சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா?"

**"நர்ஸ்: ஆபரேஷன் தியேட்டர்ல வந்துகூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க? டாக்டர்: புரியாமல் பேசாதே.. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்.

*****************
அழகே நலமா?
மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.

********************************************************************************
3.அன்பே நலமா?
மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.
***********************************************
 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.


*************************************************************************
 5.நல்மொழிகள்:
**விளம்பரப்படுத்த வேண்டாம்
பக்தியை
விளம்பரப்படுத்தினால்
அது
உண்மையாகவே பிறரையும்
பக்திசெய்ய தூண்டும்
நல்ல நோக்கமுடயதாக
இருக்கட்டும்
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment