Friday 22 March 2013

இளநீர் மருத்துவம்

ஆக்கம்  R.P.OM'S இளநீர் மருத்துவம்

சித்த வைத்தியப்படி
********************
வெறும் வயிற்றில் ,பசி முற்றிய நிலையில் உண்பது நல்லதல்ல ,  உண்பது    லேசான வழுக்கை ,நீர் இல நீர் மட்டுமே நல்லது,முற்றிய வழுக்கை இளநீர் கூடாது.
தயவு செய்து நீர் மட்டுமுள்ள இளநீர் அல்லது லேசான வழுக்கை இளநீர் மட்டுமே வாங்கவும் . 


இளநீர் + 1 தேக்கரண்டி வெந்தயம்  = மூல நிவாரணம்

இளநீரில் ஓட்டை போட்டுஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி

வீட்டு  மாடியில்  ஒரு ராத்திரி வைத்து  காலையில்  அந்த 

இளநீரைகுடித்துவிட்டுவெந்தயத்தைசாப்பிடவேண்டும். தொடர்ந்து 5 நாள் 

பருக மூலம் சரியாகும் .ஆகவில்லை என்றால் 5 நாள் கழித்து மீண்டும் 

முயற்சி செய்க நல்ல பலன் தரும். 

இளநீர் +1 தேக்கரண்டி சீரகம் = சீரான ரத்த சுழற்சி

இளநீர் + 5 சிட்டிகை மஞ்சள் தூள் = சூட்டினால் வரும் நோய்கள் ,ரத்த குழாய்களில் ஏற்படும் குறைபாடுகள் நிவாரணம்


Wednesday 13 March 2013

சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள்




 சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள்
அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..
ப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்


தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

 மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.


வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.


விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

 வாராஹி

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


இந்திராணி:

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.


இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.


தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்





Wednesday 27 February 2013

OMAALAYA அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் .- அன்புடன் R.P.OM 8056156496

                 OMAALAYA            
DIVINE LOVE YOGA CENTRE 
                 8056156496             
அன்பாய்                                
      இருப்போம்                     
அன்பையே                            
    விதைப்போம்                    
- அன்புடன் R.P.OM                 


omaalaya divine love yoga centre 8056156496

முறையாக தியானம் கற்று நலம் பலம் வளம் பல பெற்று அன்போடும் ஆனந்தத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் . அன்பும் அமைதியும் உங்களிடமிருந்தால் ஆரோக்கியம் செல்வம் ஞானம் எல்லாம் உங்கள் வசமாகும் .

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
- அன்புடன் R.P.OM



மூன்றுவகை தியானம் 
1.புற சாந்தி பிரணவ தியானம்[ உலக சுகம்] 
2.அக சாந்தி பிரணவ தியானம்[ ஞானம்,கடவுள் ] 
3.அகப்புற சாந்தி பிரணவ தியானம்
[பொருட்செல்வமும் அருட்செல்வமும் ]

1.திருமணம் நடக்கும் 
2.நீங்களும் சொந்த வீடு கட்டுவீர்கள் 
3.நன்கு படிப்பீர்கள் 
4.போட்டி பந்தயங்களில் சாதிப்பீர்கள் 
5.பிரச்சனை விலகும் 
6.நினைத்தது நடக்கும்  
7.கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும்.
8. ஆரோக்கியம் பெருகும்.
9.ஆனந்தம் நிலவும்
10.குழந்தை பேரு கிடைக்கும் 
11.உத்தியோக உயர்வு கிட்டும் 
12.வெளி நாடு செல்வீர்கள் 
13.தொழிலில் லக்ஷ்மி கடாக்ஷம் பொங்கும் 
14.உங்கள் பெயரே  அதிஷ்ட வசிய மந்திரமாக மாறும். .

ஆஹா எல்லாம் நல்ல வார்த்தைகளாக நம்பிக்கை தருகிறீர்களே .ஆமாம் இறைவனே சாத்தியம் என்கிறபோது தியானத்தால் இது  எல்லாமும் சாத்தியம் தான் .
 அனால் நிபந்தனை உண்டு 
1.உங்கள் கர்மாவை முதலில் களைய வேண்டும் இல்லையேல் அது சனீஸ் வரனை விடவும் மோசமானது 
2.நம்பிக்கையுடன் முறைப்படி பயில வேண்டும்,எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும்  
3.பல இடங்களில் தியானம் பழக கூடாது,பரிகாரம் தேட கூடாது  
4.எளிய கட்டணம் பெற்றாலும் ஏழைகளுக்கு குறைந்தது  25,000 ரூபாய் வரையிலும் செலவாகும் வசதி படைத்தோருக்கு  வசதிமிக்கொருக்கு 3 லட்சம் வரை செலவாகும் .ஆனால் எல்லா பயிற்சியும் பரிகாரமும்  இலவசம்தான்,இலவசம் தானே என்று அலட்சியமாய் பழக கூடாது    


உடனே நடக்குமா? எப்போது நடக்கும் 108 நாட்களில் நடக்கும்.
உங்கள் கர்ம வினையைப்பபொறுத்து காலம் நீடிக்கும்,சிலருக்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும் 

1.சிலருக்கு புதிய நல் கர்மா ஏற்படுத்த வேண்டும் 
2.சிலருடைய கர்மா கண்ணாடியில் படிந்துள்ள தூசு மாதிரி . அழிக்க வேண்டும் அவ்வளவுதான் காரியம் கை கூடும் 
3.சிலரது கர்மா பாறாங்கல் வெடி வைக்க வேண்டும் 
4.சிலரது கர்மாவை களைவதற்கே ஆராய்ச்சி செய்ய வேண்டிய அளவு கொடியாதாக இருக்கும்.

பொறுமை இல்லை என்றால் போலிகலை  கண்டு சுற்றி காலம் முழுவதும் அலைய வேண்டியதுதான் .பொறுமையோடிருங்கள் 100 சதவிகிதம் சாதிப்பீர்கள் 


அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
- அன்புடன் R.P.OM








Tuesday 12 February 2013

விஸ்வ ரூபம் பார்ட் - 2

விஸ்வ ரூபம் பார்ட்  - 2
விஸ்வரூபம் பார்ட் 2 வெளி வரவேண்டும் அழகிய அறிய அற்புத கலைஞன்
ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவிக்க வேண்டும் .நாவல்கள் ,செய்தி தாள்கள் ,தொலைகாட்சிகள் பேசுகிற கருத்து சுதந்திரம் சினிமாவுக்கும் இந்திய,தமிழ் பொக்கிஷமான கமல்ஜிக்கும் வேண்டும் .பல்லாயிர கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் வெற்றி நடை போட வேண்டும்
- அன்புடன் R.P.OM
******************************************************************

 **************************************************************************
********************************************************************

******************************************************************************

Sunday 10 February 2013

இந்திரஜாலி



5

சர்ப்பம்

காசியில் வாழ்ந்த செல்வந்தனின் அருமை மகளாகப் பிறந்தவள் அவனது தாய். மிகவும் எழில் வாய்ந்தவள். பருவமடைந்த அவ்வெழில் நங்கை கங்கையில் குளிக்கச் சென்றாள். அவளது அழகில் மயங்கியது மக்கள் மட்டுமல்ல. ஒரு சர்ப்பம் கூட! அவளைப் பின்தொடர்ந்தது. பயந்து ஓடினாள் நங்கை. ஆனால் அந்த சர்ப்பம் ஆண் உருக்கொண்டு அவளை பலாத்காரமாகப் பற்றி இன்பம் துய்த்தது. கருவுற்றாள் அப்பெண். அறிந்த பெற்றோர்கள் அவளை வீட்டை விட்டு துரத்தினர். அவ்வபலைப் பெண்ணுக்கு புகலிடம் அளித்தான் ஒரு வயதான கிழவன். அங்கு அவள் ஒரு ஆண் மகவை ஈன்றாள். குயவன் மகனாக வளர்ந்தான் குழந்தை. ஏழு ஆண்டுகள் நிறைந்தன.
தில்லியின் அரசன் காசிமீது படையெடுத்து ஏராளமான கப்பம் அளிக்க வேண்டும் என்று காசி மன்னனை அச்சுறுத்தினான். செய்வதறியாது ஆலோசனை நடத்தினான் மன்னன். அப்பொழுது கலயங்கள் கொடுக்க வந்த அச்சிறுவன் போரிடுவதே சிறந்தது எனக் கூறினான். அன்றுமாலை விளையாட்டாக காட்டுக்குள் சென்றவன் இருளில் சிக்கி கொண்டான். திரும்பவழி தெரியாத திகைத்தது ஒருபுறம். மறுபுறம் தம்மன்னனை போரிடச் சொல்லிவிட்டு தான் ஏதும் செய்ய முடியாது போய்விட்டதே என்ற ஏக்கம் வேறு! சிறுவனாதலால் "ஓ" வென்று கதறினான். சிவபெருமானும் பார்வதியும் அவன் முன் தோன்றினர். அவன் திரும்புவதற்கு வழிகாட்டி ஒருவரமும் அளித்தனர். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் மண் பொம்மைகள் மீது விபூதியைத் தூவினால் ஒன்று ஆயிரம் வீரராக மாறி அவனுக்கு உதவுவர் என்று கூறினர். ஒன்றில் மட்டும் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மண்ணில் இருந்து தோன்றியவர்கள் ஆதலால் நீரில் இறங்கினால் கரைந்து விடுவர் என்று கூறி சிவபெருமான் தேவியுடன் மறைந்தார். மறுநாள் சாலிவாஹனன் தனது மண் பொம்மைகளை வீரர்களாக மாற்றி தனது அரசனுக்காக தில்லி அரசனுடன் போரிட்டான். தில்லிப்படை தோற்று ஓடி நர்மதையின் கரையை தாண்டியது. வெற்றிப் பெருமிதத்தில் என்ன செய்கிறோம் என்று எண்ணாமல் தன் படையை ஆற்றில் இறக்கினான் சாலிவாஹனன். முடிவு! அவனது வீரர்கள் ஆற்றில் கரைந்து போயினர். காசிக்குத் திரும்பினான். காசிமன்னன் அவனது உதவியை மெச்சி அவனை பதல்கார் பகுதியின் அரசனாக்கினான். சாலிவாஹனன் நர்மதைக் கரையில் உள்ள பைரவ கட்டடத்துக்கு மீண்டும் வந்து நன்றி பெருக்கோடு சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுத்தான்.
இது சரித்திரம் அல்ல கதை. நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் ஜபல்பூரிலிருந்து 20 கல் தொலைவில் உள்ள பேராகாட் என்ற இடத்தில் உள்ள ஒரு விசித்ரமான கோயிலைக் காணச் சென்றபோது அந்தக் கோயிலாப் பற்றி மக்கள் கூறிய கதைதான் இது. இதை அவர் குறித்து வைத்துள்ளார்.
இங்குள்ள கோயில் இப்பொழுது உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. மற்ற கோயில்களைக் காட்டிலும் மாறுபட்டது. வட்டமான மண்டலம் போல் ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில் 64 பெண் தேவதைகளின் உருவங்கள் உள்ளன. இந்தப் பெண் தெய்வங்களை யோகினிகள் என்பர். ஆதலால் இக்கோயிலை 64 யோகினிகளின் கோயில்கள் என்று "சௌளஷட் யோகினி மந்திர்" என்று அழைக்கிறார்கள். இது போன்ற யோகினி கோயில்கள் இந்தியாவிலேயே 5 கோயில்கள் தான் இருந்ததாக தெரிய வருகிறது. இங்கு வழிபாடு வாமாசார வழியில் ரகசியமாக நடைபெறும். இந்த மண்டலத்தில் நடுவே ஒரு ஆலயம் இருந்தது. அதில் வைரவக் கடவுள் வைரவியுடன் இருந்திருக்கக் கூடும். இந்தக் கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் இராஜராஜன் தஞ்சாவூரில் பெரியகோயிலைக் கட்டுவதற்கு ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்பொழுது இந்தப் பகுதியை கலசூரி வம்சத்து அரசர் ஆண்டார். தமிழ்நாட்டில் சோழர், பாண்டியன், பல்லவர் போல மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக கலசூரி அரசர்கள் கி.பி. 850 லிருந்து 1350 வரை 500 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இக்கோயிலை போற்றியிருக்கிறார்கள்.
இங்கு வாமமார்க்கத்தில் வழிபாடு நடைபெற்றது என்று கூறினேன். வாமமார்க்கம் என்றால் தேவியை முழுமுதல் கடவுகளாகக் கொண்டு வழிபடுவது. இதையே சாக்த வழிபாடு என்பர். இந்த வாமமார்க்கத்தை கௌளலமார்க்கம் என்றும் கூறுவர். லலிதா திரிபுரசுந்தரியை போற்றும் லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியை 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுகிறாள்; 64 கலைகளின் உருவமாகத் திகழ்பவள்; 64 கோடி யோகினி கணங்களால் ஸேவிக்கப்படுபவள் என்று
சதுஷ் ஷஷ்டி உபசாராட்யா
சதுஷ் ஷஷ்டி கலா மயீ
மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகீனி கண ஸேவிதா

என்றும் கூறுகிறது. யோகினிகள் என்ற பெண் தேவதைகள் தேவியை உபாஸிக்கும் தேவதைகள். இவர்கள் எப்பொழுதும் கூட்டமாக ஒரு வட்டமாக கைகோத்து செல்வர். ஆடிப் பாடிக் கொண்டிருப்பார்கள். ஆகாயமார்க்கமாகச் செல்லும் இவர்கள் பயங்கரமான சக்தி வாய்ந்தவர்கள். எதிரிகளை சின்னாபின்னமாக மிகவும் கொடூரமாக அழித்து விடுவர். ஆயினும் தமது அன்பர்களை அன்னை போல காத்தளிக்க வல்லவர்கள். 64 வகையான கலைவடிவில் நீ திகழ்கிறாய் என்று திரிபுரசுந்தரியை லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுவதிலிருந்து, 64 யோகினிகள் என்ற உருவங்கள் கலைகளின் அம்சங்கள் என்று தெரிய வருகிறது. ஒப்பற்ற முனிவர்களின் மனத்தில் ஒவ்வொரு கலையும் ஒரு தேவதையாக உருவகிக்கப்பட்டு வழிபடப் பட்டிருக்கக் கூடும். இத்தேவதை வழிபாட்டில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ரகசியமாக மது, மத்ஸ்யம், மாம்சம், முத்திரை, மைதுனம் என்னும் பஞ்சமகாரங்களால் உபாசிப்பது. மற்றொன்று இவை அனைத்தையும் துறந்து யோகமார்க்கத்தில் மனத்திலே பராசக்தியை ஆவஹித்து, அவளுக்கு துணையாக 64 யோகினிகளை அங்கங்களில் ஆவஹித்து, யோகியாகி, ஞானியாகி மலர்தலாகும். இவ்விரு மார்க்கங்களில் ஞானயோக மார்க்கமே சிறந்தது என்பது இவ்வழிபாட்டின் உண்மை தத்துவம்.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் உள்ள யோகினிகளின் சிற்ப உருவங்கள் கலை வரலாற்றில் மிகச் சிறந்த இடம் பெறுகின்றன. எழிலான உடற்கட்டும், வெவ்வேறு நிலைகளும், வாஹனங்களும், யோகியரும், முனிவர்களும் கரம் கூப்பி வணங்கும் பாங்கும், அருள் ததும்பும் முகங்களும் உடையவையாக இவை திகழ்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வடித்தெடுக்கபட்ட இவை கடைந்தெடுத்த அழகு என்பார்களே அப்படித் திகழ்கின்றன. அதனால் தான் இவற்றின் அழகை உலகம் முழுவதும் புகழ்கின்றன. இவற்றில் பல சிற்பங்களின் அடியில் அந்தந்த யோகினிகளின் பெயர்கள் எழதப் பட்டுள்ளன. காமதா, அந்தகாரி, சர்வதோமுகி, மண்டோதரி, அஜிதா, ஆனந்தா, இந்திரஜாலி, என்றெல்லாம் பெயர்கள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினியாகிய துர்க்கை "தெரம்சா" என்று அழைக்கப்படுகிறாள். திரி அம்பா என்பதின் திரிபாக இது தோன்றுகிறது. இந்த யோகினிகளின் உருவைத் தவிர ஸப்தமாதாக்கள், நடனமாடும் நிருத்த கணபதி முதலிய உருவங்களும் உள்ளன. கங்கை, யமுனை, ஸரஸ்வதி, நர்மதை ஆகிய நதி தெய்வங்களும் இங்குள்ளன.
நர்மதை ஆற்றங்கரையில் மனதுக்கு இன்பமான ஒரு பளிங்கு குன்றை தேர்ந்தெடுத்து அதன் உச்சியில் இந்தக் கோயிலை கட்டியிருக்கிறார்கள். சாக்த வழிபாட்டில் மிகச் சிறந்த கோயிலாகத் திகழந்த இந்தக் கோயிலை அது தோன்றி 200 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1155 ம் ஆண்டில் கலசூரி அரசன் நரசிம்மன் என்பவனின் தாய் அல்லன தேவி என்பவள் திருப்பணிசெய்து இந்த மண்டலத்தின் நடுவில் பைரவருக்கு பதிலாக உமையொருபாகனாக சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்தாள். அதை கௌளரீசங்கர் என்று வணங்குகிறார்கள். வாமமார்க்கம் மறைந்து சைவக் கோயிலாக அதுமாறிய போதினும், யோகினிகளின் வழிபாடு தொடர்ந்தது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வந்தானய்யா பாவிகள்! வேறு சமயத்தான். இந்த வழிபாட்டைப் பாராட்ட வேண்டாம். இதன் கலையாவது ரஸிக்கக் கூடாதா ஒரு சிற்பம் விடாது காலையோ கையையோ மூக்கையோ உடைச்சே தீர்த்தான். அவ்வளவு வெறி! இந்த பின்னமான நிலையில் கூட இவை எவ்வளவு எழில் சிற்பங்களாக பொலிகின்றன பாருங்கள்.
யோகினிகளுக்கென்று தனித்தன்மை வாய்ந்ததாக கட்டப்பட்ட கோயில் "பேராகாட்" சௌளஷட்யோகனி கோயில். ஒன்று சொல்ல மறந்து விட்டனே! தமிழ் நாட்டில் இது போன்ற கோயில் இருந்ததா? கோயம்பத்தூருக்கு அருகில் வட்டமான யோகினி கோயில் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக குறித்துள்ளார்கள். அது எங்கிருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சியம், தமிழ்நாட்டிலும் யோகினிகளை போற்றியிருக்கிறார்கள். தக்கயாகப்பரணி என்னும் நூலில் ஒட்டகூத்தர் யோகினிகளை குறித்துள்ளார்.
அடையாளமுளரித் தலைவி ஆதிமடவார்
உடைய திருவகம்படியில் யோகினிகளே

என்றும் இன்னும் பலவாகப் பாடியுள்ளார். காஞ்சீபுரத்துக்கு அருகில் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் இது போன்ற ஒரு கோயில் 8ம் நூற்றாண்டில் இருந்தது. அதை அலங்கரித்த சிற்பங்களை சுமார் 70ம் ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். பாரீஸ், லண்டன், நியூயார்க் என பல மியூசியங்களில் இவை உள்ளன.
தேவியைத்தான் எத்தனை கோலங்களில் உருவகித்து கற்பித்து தாயாகப் போற்றியுள்ளது இந்த பாரத புண்ணிய பூமி! காண்பதெல்லாம் தெய்வம். செயலனைத்தும் அதன் வழிபாடு என உணர்ந்து வழிபட்ட ஞானபூமி இது.